கடவுளால் அனுப்பப்பட்டவர் ஏன் தியானம் செய்ய வேண்டும்? மோடியின் கன்னியாகுமரி தியானம் பற்றி மம்தா பானர்ஜி பேச்சு!
கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(மே30) முதல் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக தியானம் மேற்கொள்ளவுள்ளார். இதையடுத்து மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தியானம் குறித்து பேசியுள்ளார்.
ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடர்ச்சியாக தியானம் மேற்கொள்வார். அந்த வகையில் 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் பொழுது உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரதாப்கரில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தியானம் செய்தார்.
அதே போல 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் பொழுது கேதார்நாத் குகையில் தியானம் செய்தார். அவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தியானம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி பேசுபொருளாக மாறியது.
அந்த வகையில் இந்த முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருக்கும் பொழுது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் இன்று(மே30) முதல் தொடர்ச்சியாக 45 மணி நேரம் தியானம் செய்யவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தியானம் செய்யும் இந்த மூன்று நாட்களும் மருத்துவக் குழுவினர், பாதுகாப்பு படையினர், கேந்திரா பணியாளர்கள் மட்டுமே இருப்பார்கள். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தியானம் செய்வதை அடுத்து அங்கு 3000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கடலோரக் காவல் படையினரும் தெடர்ச்சியான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தியானம் குறித்து மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தியானம் குறித்து மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் “தியானம் என்பது நீங்கள் செய்யலாம். நான் செய்யலாம். யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தியானம் செய்யும் இடத்திற்கு யாராவது கேமரா எடுத்து செல்வார்களா? விதவிதமாக புகைப்படங்கள் எடுப்பார்களா?
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை தியானம் என்ற பெயரில் ஏசி அறையில் சென்று உட்காருவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஏன் எந்தவொரு அரசியல் கட்சியும் இது குறித்து பேசவில்லை என்று எனக்கு தெரியவில்லை.
பரமாத்மாவால் அனுப்பப்பட்டவர் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறிக் கொள்கிறார். அப்படி இருக்க அவர் ஏன் சென்று தியானம் செய்ய வேண்டும். மற்றவர்கள் தான் அவருக்காக தியானம் செய்ய வேண்டும்.
கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தியானம் செய்வதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பக் கூடாது. அவ்வாறு ஒளிபரப்பினால் அது தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகும். நான் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து விடுவேன்” என்று கூறியுள்ளார்.