Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏன் பெண்கள் கட்டாயமாக நெற்றியில் குங்குமம் இட வேண்டும்?

ஏன் பெண்கள் கட்டாயமாக நெற்றியில் குங்குமம் இட வேண்டும்?

ஒவ்வொரு திருமணமான பெண்ணுக்குமே தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தீர்க்க சுமங்கலையாக வாழ வேண்டுமென ஆசைப்படுவார்கள். தன்னுடைய கணவர்,குடும்பம் மற்றும் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.

 

குங்குமம் சாதாரணமான கடையில் வாங்கி வைப்பதை விட அருகிலுள்ள அம்மன் கோவிலில் இருக்கும் குங்குமத்தை நெற்றியில் வைப்பது பெண்களுக்கு மேலும் சிறப்பு அளிக்கும். அதன்படி கோவிலுக்கு செல்லும் போது பிரசாதம் தரும் குங்குமத்தையும் சேகரித்து வைத்து அதை வெளியில் செல்லும்போது நெற்றியில் வைத்து சென்றால் பலன் கிடைக்கும்.

பூஜை அறைக்கு சென்று தினம் தோறும் நெற்றிலும் வகுடிலும் தாலி கொடியிலும் குங்குமத்தை வைத்து பிரார்த்தனை செய்து கொண்டால் உங்களுடைய மாங்கல்யத்தின் பலம் இரட்டிப்பாக அதிகரிக்கும். அதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய கணவனின் முன்னேற்றமும் அதிகரிக்கும்.

 

ஏனென்றால் கணவனின் பாதி மனைவி. மனைவியின் பாதி கணவர். இதைத்தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு வீட்டில் இருக்கும் தெய்வத்தை தரிசனம் செய்வது நல்லது. இப்படி இருவரும் ஒரு மனதாக தெய்வத்தை வழிபட்டு நெற்றியில் திருநீர் அல்லது குங்குமம் இட்டுக் கொண்டால் குடும்பத்தில் கஷ்டமும் நஷ்டமும் வளராது. மேற்கூறிய அனைத்தையும் கடவுள் பக்தி உள்ளவர்கள் செய்து பாருங்கள் உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறப்புடன் வளர்ந்து கொண்டே இருக்கும்.

Exit mobile version