ஏன் உடலின் நிறம் மாறுகின்றது! காரணம் இதோ தெரிந்து கொள்ளுங்கள்!

0
144

ஏன் உடலின் நிறம் மாறுகின்றது! காரணம் இதோ தெரிந்து கொள்ளுங்கள்!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களும் அதிகளவு வேலைக்கு சென்று வருவதினால் மாசு காற்று காரணமாக பெண்களின் முகத்தின் நிறம் மாற்றம் அடையும். அவை ஏன் ஏற்படுகின்றது அதற்கான காரணம் என்ன என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மன அழுத்தத்தினால் முகத்தின் பொலிவுத்தன்மை பாதிக்கப்பட்டு முகம் கருமையாக மாறுகின்றது மேலும் முதிர்ந்த தோற்றத்தையும் நாம் பெறுகின்றோம்.

மன அழுத்தத்தின் அறிகுறிகள்:

மன அழுத்தம் அதிகரித்தால் சருமத்தில் வயதான தோற்றம் ஏற்படும். மேலும் செல்கள் அனைத்தும் சேதமடைந்து தோல் எப்பொழுதும் சோர்வாகவும், வீக்கத்துடனும், மங்கலாகவும் காணப்படும்.

இதனை தடுப்பதற்கு ஆண்டி ஆக்சிடன்ட்கள் மிகவும் உதவுகின்றது. ஆக்சிஜனேற்றம் நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்தும் உடல் சோர்வில் இருந்தும் விடுபடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆக்சிஜனேற்ற அழுத்தம் ஏற்பட காரணம் உடலின் உள்பகுதியில் ஏற்படும் பிரச்சனையால் தான். மேலும் உடலில் உள்ள செல்கள் சேதம் அடைவதனாலும் புரதங்கள் சேதமடைவதனாலும் ஆக்சிஜனேற்ற அழுத்தம் அதிகரிக்கிறது. அதனை குறைப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சியை தினமும் மேற்கொள்ள வேண்டும்.

நாம் தினந்தோறும் எடுத்துக்கொள்ளும் உணவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் போன்றவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் நாள் ஒன்றுக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் நல்ல தூக்கம் மிக மிக அவசியமான ஒன்றாக உள்ளது.

ஒரு நாளொன்றுக்கு மூன்று, நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மன அழுத்தம் உடல் சோர்வு ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் போன்றவைகளில் இருந்து நம் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.