Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏன் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது! வல்லபாய் படேல் அப்படி என்ன செய்தார் அறிந்து கொள்ளலாம்!

Why today is celebrated as National Unity Day! Let's know what Vallabhbhai Patel did!

Why today is celebrated as National Unity Day! Let's know what Vallabhbhai Patel did!

ஏன் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது! வல்லபாய் படேல் அப்படி என்ன செய்தார் அறிந்து கொள்ளலாம்!

குஜராத்தின் கேடா என்ற மாவட்டத்தில் நாடியாத் என்ற கிராமத்தில் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி பிறந்தவர் தான் வல்லபாய் படேல்..இவருடைய கனவு ஒரு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதாக இருந்தது.அந்த கனவை நிறைவேற்ற சுயமாக வேலை பார்த்து பணம் சேர்த்தார்.அதனையடுத்து பாரிஸ்டர் பட்டம் பெற இங்கிலாந்து சென்றார்.

அதன் பிறகு வறுமை காரணமாக சக மாணவர்களின் புத்தகங்களை கடனாக வாங்கி அவருடைய படிப்பை தொடர்ந்தார்.இரண்டு ஆண்டுகளிலேயே அவருடைய படிப்பை முடித்துவிட்டு மீண்டும் இந்தியா திரும்பினார்.அதனையடுத்து இவர் ஆகமதாபாத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.விடுதலை உணர்வு காரணமாக சதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றார்.காந்திஜியின் உப்பு சத்யாகிரக போராட்டத்திலும் பங்கு பெற்றார்.அதனால் இவர் சிறைச்சாலை சென்றார்.

மேலும் ஒத்துழையாமை இயக்கத்தின்படி வெளிநாட்டு ஆடைகளை புறகணித்தார்.அவருடைய மகன் மற்றும் மகள் வைத்திருந்த வெளிநாட்டு ஆடைகளையும் தூக்கி வீசினார்.மேலும் இந்தியா சுதந்திரம் பெற்ற போது நாடு 565 சமஸ்தானங்களாக பிரிந்து இருந்தது.இவை அனைத்தும் சுதந்திர பகுதிகளாக இருக்கவேண்டும் என்பதற்காக சமஸ்தான ஆட்சியாளர்கள் கேட்டார்.

மேலும் இவற்றை ஒருங்கிணைக்கும் பொறுப்பை நாட்டின் முதல் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராகவும் இருந்த படேலிடம் ஒப்படைக்கப்பட்டது.பிகானிர் ,பாட்டியாலா ,குவாலியர் பரோடா முதலிய சமஸ்தானங்கள் இணைந்தது.பெரும்பாலான சமஸ்தானங்கள் தாமாகவும் சில பேச்சுவார்த்தையின் மூலமாகவே இணைக்கப்பட்டது.

மேலும் தமிழகத்தில் இருந்த ஒரே சமஸ்தானமாக புதுக்கோட்டை 1948 மார்ச் மூன்றாம் தேதி இணைந்தது.அதனையடுத்து  இவருடைய சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பிரதமர் மோடியின் முயற்சியால் குஜராத்தின் சர்தார் சரோவர் ஆணை அருகே உலகின் மிக உயரமான சிலை 2018 ஆம் ஆண்டு 31ஆம் தேதி திறக்கப்பட்டது.அந்த சிலையின் உயரம் சுமார் 597 அடியாகும்

Exit mobile version