Big Boss மூன்றாவது சீசன் விஜய் டிவி ஒளிப்பரப்பு ஆகிகொண்டிருக்கிறது. இதில் பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இயக்குனர் சேரனும் ஒருவர் என அனைவரும் அறிந்ததே. இதனால் இயக்குனர் சேரம் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது பற்றி இயக்குனரும், நடிகருமான மனோபாலா கருத்து தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் (Big Boss) வீட்டில் ஒரு விளையாட்டின் போது சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என மீரா மிதுன் கூறிய குற்றச்சாட்டு ரசிகர்களிடையே அவர் மீது அதிருப்தியை ஏற்பட்டு அவருக்கு ஆன்லைன் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. இதனால், மீரா மிதுன் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என செய்திகள் கசிந்துள்ளது
அவர் மீது மீரா மிதுன் இப்படி பாலியல் புகார் கூறியது சேரனின் ரசிகர்களுக்கு அவர் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, மீராவின் குற்றச்சாட்டை பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் உண்மைக்கு மாறான விசியங்களை தெரிவிக்கிறார். எனவே, அவர் நடிக்கிறார் என big boss வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தெரிவிக்கின்றனர் .

இந்நிலையில் இந்நிகழ்வு பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் மனோபாலா ‘ சேரன் எவ்வளவு நல்ல படங்களை கொடுத்த இயக்குனர் நல்ல நடிகரும் ஆவார். பிக்பாஸ் வீட்டிற்கு அவர் ஏன் போக வேண்டும். அவர் அங்கு போனதே தவறு என்னை கூடத்தான் 3 முறையும் கூப்பிட்டார்கள். ஆனால், நான் செல்ல வில்லை’ என அவர் கூறியுள்ளார்.
இது தவிர bigg boss நமது வாழ்வியல் தன்மையை கெடுக்கும் விதமாக இருக்கிறது என அதை தடை செய்ய வேண்டும் எனவும் ஒரு சாரார் கூறுகின்றனர்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.