Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையில் பரவலாக பெய்த கனமழை.!! சாலையில் தேங்கிய மழைநீர்.!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும், இன்று கோயம்புத்தூர், நீலகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி, சேத்துப்பட்டு, சைதாப்பேட்டை, சத்யாநகர், சிந்தாரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

தற்போது, பெய்துள்ள இந்த மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அவர் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும். அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு சென்னை. காஞ்சிபுரம். செங்கல்பட்டு, திருவள்ளூ,ர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Exit mobile version