தமிழகத்தில் பெய்து வரும் பரவலான மழை கனமழை! பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்!

0
163

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் தொடங்கியதிலிருந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்சமயம் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய இலங்கை கடலோரப் பகுதியில் நிலைகொண்டு இருக்கிறது.

இதனால் இன்று நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை புதுக்கோட்டை, தஞ்சை ,மதுரை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை மற்ற மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் அனேக பகுதிகளில் மிதமான மழையும் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது ஆகவே 14 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாளையும், நாளை மறுநாளும், தூத்துக்குடி, நெல்லை, குமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்கள் அதோடு புதுச்சேரியில் அனேக பகுதிகளில் மிதமான மழையும் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கை செய்கிறது.

இந்த சூழ்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் தேவர்கண்டநல்லூர், குளிக்கரை, புலிவலம், விளமல், மடப்புரம், உள்ளிட்ட இடங்களில் அளவிலான மழை பெய்திருக்கிறது. திருச்சி,ஸ்ரீரங்கம்,, திருவெறும்பூர், வயலூர், மணிகண்டம் கேகே நகர், உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதேபோல சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல் அதனை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளிலும் மழை பெய்திருக்கிறது. தமிழ்நாட்டில் தென்காசி, குமரி நெல்லை, உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.