Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த மாவட்டத்தில் மட்டும் பரவலாக மழை!. விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை!!

 

இந்த மாவட்டத்தில் மட்டும் பரவலாக மழை!. விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை!!

 

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகின்றது. ஒருபுறம் காலையில் வெயில் வாட்டி வதைக்கின்றது. மறுபுறம் மாலையில் மேகமூட்டத்துடன் வானம் காணப்படுகிறது. இந்நிலையில் காடையாம்பட்டி, மேட்டூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆணைமடுவு, சங்ககிரி, ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி ,தம்மம்பட்டி, நங்கவள்ளி, இளம்பிள்ளை, தாரமங்கலம், ஆகிய இடங்களில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையினால் சாலைகள் எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடியது. இதனால் அந்தப் பகுதிகளில் உள்ள ஏரி குளங்களில் நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டமும் உயிருகிறது. இதனால் விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதன்படி சேலம் மாவட்டத்தில் மட்டும் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு,

காடையாம்பட்டி 17,மேட்டூர் 13.-2 பெத்தநாயக்கன்பாளையம் -13 ஆணை மடுவு 8, சங்ககிரி 7.4, ஆத்தூர் 6.2, கெங்கவல்லி -6, எடப்பாடி-4, தம்மம்பட்டி -2 என ஒவ்வொரு மாவட்ட வாரியாக மாவட்டம் முழுவதும் 51.4 மில்லி லிட்டர் மழை பதிவாகியுள்ளது

Exit mobile version