Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காரில் கடத்தி விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை! டீக்கடை ஊழியர் கைது!

Widow abducted in car sexually harassed Tea shop employee arrested!

Widow abducted in car sexually harassed Tea shop employee arrested!

காரில் கடத்தி விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை! டீக்கடை ஊழியர் கைது!

சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய விதவை பெண் ஒருவர் தன் சகோதரருடன் வசித்து வந்தார்.இந்நிலையில் வெகுநேரமாகியும் தனது சகோதரியை காணவில்லை என அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார்.இதை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வில் சம்பவம் நடந்த பகுதியின் சிசிடிவி பதிவுகளை கண்காணித்தனர். சிசிடிவி மூலம் ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தது.அந்த பெண்ணை ஒருவர் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த டீ கடையில் வேலை செய்யும் அண்ணாநகர் கீழ்நடுவங்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் (41) தான் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை மீட்டனர்.சக்திவேலையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில் சக்திவேல் அந்த பெண்ணை ஏமாற்றி காரில் அழைத்து சென்றது தெரியவந்தது.பெண்ணை கடத்தி மறைமுகமான இடத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதை தொடர்ந்து சக்திவேலை போலீசார்  கைது செய்தனர்.பின்னர்  நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version