Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மனைவிக்கு பாலியல் தொல்லை தந்தவரை அடித்து கொன்ற கணவர்?

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி தெற்கு மணக்காடு பகுதியை சேர்ந்தவர்
கலியமூர்த்தி இவரின் மனைவி கனகா, உறவினரான பக்கத்து வீட்டைu சேர்ந்த ராமர். தொடர்ந்து கனகாவிற்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கலியமூர்த்தி, கனகா, மற்றும் கனகாவின் தந்தை மூவரும் ராமரின் தோட்டத்தில் அடித்து கொன்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் விவசாயி ராமர், தனது தோட்டத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். 

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், ராமரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்,

இதுகுறித்து கலியமூர்த்தி போலீசிடம் கூறுகையில் ராமரை எவ்வளவு மிரட்டியும் அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலியமூர்த்தி, தமது மனைவி கனகா மற்றும் அவரது தந்தையின் உதவியுடன் ராமரை அடித்து கொலை செய்தேன் என்று கூறினார் . இது குறித்து மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version