Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தன்னைப் போலவே இருக்கும் செக்ஸ் பொம்மையை கணவனுக்குப் பரிசளித்த மனைவி!

தன்னைப் போலவே இருக்கும் செக்ஸ் பொம்மையை கணவனுக்குப் பரிசளித்த மனைவி!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னைப் போலவே இருக்கும் பொம்மையை கணவருக்காக பரிசளித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள வார்விக்ஷையர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்,  அவரைப் போன்ற தோற்ற ஒற்றுமை கொண்ட ஒரு செக்ஸ் பொம்மையை கணவருக்கு பரிசளித்துள்ளார். சார் கிரே மற்றும் அவரது 28 வயதான கணவர் காலும் அவர்களின் இந்த செயலுக்காக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றனர்.

இது சம்மந்தமாக பேசியுள்ள சம்மந்தப்பட்ட பெண் கிரே, ‘தன் கணவனின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தன்னைப் போன்ற தோற்றமுடைய ஒரு செக்ஸ் பொம்மையை வாங்கியதாக கூறியுள்ளார். இந்த பொம்மைக்கு டீ என்று பெயரிடப்பட்டுள்ளது மற்றும் அதன் விலை 1500 பவுண்டுகள் (சுமார் ரூ. 1.43 லட்சம்).

பொம்மையின் நோக்கம் தனது கணவரின் அதீத செக்ஸ் உந்துதலைக் குறைப்பதாகும். தனது கணவருக்கு அதிக செக்ஸ் ஆசை இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால் தான் அந்த மனநிலையில் இல்லாதபோது ‘அவருக்கு பொம்மை கிடைத்தது’ என்று கிரே கூறியுள்ளார்.

மேலும் ‘டீ எங்களுக்கு ஒரு உயிரற்ற பொம்மை மட்டுமல்ல, ஒரு குடும்ப உறுப்பினர். நாங்கள் டிவி பார்க்கும்போது அல்லது லாங் டிரைவ்களில் வெளியே செல்லும்போது டீ எங்க்ளுடன் சேர்ந்துகொள்கிறார். அவள் “வெறும் ஒரு பொம்மை” அல்ல – நாங்கள் அவளுடன் மிகவும் இணைந்திருக்கிறோம். அவள் எங்கள் உறவை வலுப்படுத்த உதவினாள் – மேலும் எங்கள் செக்ஸ் வாழ்க்கையை சிறப்பானதாக்கினாள் ” என்று அந்த பெண் கூறியுள்ளார்.

அந்த பெண்ணும் அவரின் கணவரும் அந்த பொம்மையோடு இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Exit mobile version