Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மணாலியில் கள்ளக்காதலனுடன் மஜா செய்த மனைவி..!! டிரம்முக்குள் வீசிய துர்நாற்றம்..!! 15 துண்டுகளாக கிடந்த கணவனின் உடல்..!! திடுக்கிட வைக்கும் சம்பவம்

மீரட்டில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, 15 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்து உடல் பாகங்களை டிரம்முக்குள் போட்டு மணாலிக்கு சுற்றுலா சென்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கவுரிபுரா பகுதியைச் சேர்ந்த பெண் முஸ்கான் ரஸ்தோகி (27). இவர், சவுரப் ராஜ்புத் (29) என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு இரு வீட்டார் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், மீரட்டின் இந்திரா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து, இந்த தம்பதிக்கு கடந்த 2019ஆம் ஆண்டில் பெண் குழந்தை  ஒன்று பிறந்தது.

இதையடுத்து, ஷகில் (25) என்பவருடன் முஸ்கான் ரஸ்தோகிக்கு பழக்கம் ஏற்பட்டது. தனது கணவர் சவுரப் கப்பலில் வேலைபார்ப்பதால், மாதக்கணக்கில் வீட்டிற்கே வரமாட்டார். இது மனைவி ஷகிலுக்கு சாதகமாக அமைந்தது. இந்நிலையில், சவுரப் வேலை பார்த்த கப்பல், கடந்த மாதம் லண்டன் வந்தது. தனது மனைவியின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த சவுரப், திடீரென லண்டனில் இருந்து புறப்பட்டு பிப்ரவரி 24ஆம் தேதி உத்தரப்பிரதேசத்திற்கு வந்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். அதன்படி, கடந்த 4ஆம் தேதி, கணவருக்கு உணவில் அதிகளவு தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார். பின்னர், அவர் மயங்கியதும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவர் சவுரப்பை 15 துண்டுகளாக வெட்டிக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர், அங்கிருந்த பெரிய டிரம்முக்குள் சவுரப்பின் உடல் துண்டுகளை போட்டு மூடி, சிமெண்டால் பூசியுள்ளனர்.

இதையடுத்து, சவுரப்பை சில நாட்களாக காணவில்லை என அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது, அவர் மணாலி சென்று விட்டதாகவும், தானும் அங்கு செல்ல இருப்பதாகவும் முஸ்கான் கூறியுள்ளார். பின்னர், தனது கள்ளக்காதலனுடன் மணாலி சென்றிருக்கிறார். அங்கிருந்தபடி, எந்த சந்தேகமும் வராத வகையில், கணவர் சவுரப்பின் இன்ஸ்டா ஐடியில் இருந்து புகைப்படங்களை பதிவிட்டு, அவர் உயிருடன் இருப்பதாக நம்ப வைத்து வந்துள்ளார். ஆனால், சவுரப்பை அவரது குடும்பத்தினர் செல்போனில் தொடர்பு கொண்டு பார்த்துள்ளனர். யாரும் எடுக்கவில்லை.

இதனால், சந்தேகமடைந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதற்கிடையே, 10 நாட்களுக்கு மேல் திறக்கப்படாமல் கிடந்த முஸ்கான் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம்பத்தினருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், துர்நாற்றம் வீசிய டிரம்மை திறந்து பார்த்தபோது, சவுரப்பின் உடல் பாகங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சவுரப்பின் மனைவி முஸ்கானையும், அவரது கள்ளக்காதலன் ஷகிலையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது, கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version