Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பரிதாப நிலையில் மனைவி? மருத்துவமனைக்கு வேண்டாம் என ரகளை செய்த கணவன்!

wife-in-distress-the-husband-did-not-want-to-go-to-the-hospital

wife-in-distress-the-husband-did-not-want-to-go-to-the-hospital

பரிதாப நிலையில் மனைவி? மருத்துவமனைக்கு வேண்டாம் என ரகளை செய்த கணவன்!

சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வருபவர் பழனி. இவர் கார் ஓட்டுனர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாரதி. கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போதுதகராறு  ஏற்படும். அந்த வகையில்  பாரதியின் மீது உள்ள சந்தேகத்தால் பழனி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். அந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக  மாறியது அப்போது ஆத்திரம் அடைந்த   கணவர் பழனி அவரை கடுமையாக தாக்கி கீழே தாக்கியுள்ளார்.

அப்போது கீழே விழுந்ததில் பாரதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் பாரதியை மீட்டு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் பொழுது பாரதியின் கணவர் அவரை அழைத்துச் செல்ல விடாமல் தகராறில்  ஈடுபட்டுள்ளார். மேலும் அக்கம் பக்கத்தினர் போராடி பாரதியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பாரதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தார். மேலும் இது குறித்து போலீசாரிடம் பாரதியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார்  வழக்கு பதிவு செய்து பழனியை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேக புத்தியால் மனைவியை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version