Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கள்ளகாதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவன்.. உணவில் ஸ்லோ பாய்சன் வைத்து கொலை செய்த மனைவி..!

கணவனுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்தவர் கமல்காந்த். இவருக்கும் கவிதா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.

இதனால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், குழந்தைக்காக மறுபடியும் ஒரே வீட்டில் வாழ ஆரம்பித்துள்ளனர். அப்போது, கவிதாவிற்கும் கமல்காந்தின் நண்பர் ஹிடேஷ்க்கும் காதல் மலர்ந்துள்ளது. இதற்கிடையே கமல்காந்தின் தாய் வயிற்று வலியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கமல்காந்திற்கும் தீரா வயிற்று வலி ஏற்படவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ரத்ததில் ஆர்செனிக் மற்றும் தாலியம் இருந்தது கண்டறியப்பட்டது. இவை ரத்ததில் இருப்பது இயற்கையானது இல்லை என்பதால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதற்கிடையில் கமல்காந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவரது மனைவியும் கள்ளகாதலனும் இணைந்து திட்டமிட்டு கமல்காந்தை கொலை செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. கவிதா அளித்த வாக்குமூலத்தில் தினமும் உணவில் ஸ்லோ பாய்சனை கலந்து கொடுத்ததாகவும் அதனால், அவர் இறந்ததாகவும் தெரிவித்தார்.

இதனை அடுத்து, கமல்காந்தின் தாயார் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் காவல்துறையினர் அவருக்கும் ஸ்லோ பாய்சன் கொடுத்தார்களா? எனவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கள்ளகாதலனுடன் இணைந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version