Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மனைவியை கண்டித்த கணவன்! எரித்துக் கொன்ற சோகம்!

fire-dead

fire-dead

மனைவியை கண்டித்த கணவன்! எரித்துக் கொன்ற சோகம்!

ஆலந்தூரில் மடிப்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி.இவர் துணி இஸ்திரி போடும் பணி செய்து வருகிறார்.இவரது மனைவி பார்வதிக்கு(34), வேறு ஒரு நபருடன் தவறான தொடர்பு இருந்ததாக பாண்டிக்கு தெரியவந்துள்ளது.

பல முறை பாண்டி தன் மனைவியை கண்டித்தும், மனைவி கணவன் சொல் கேட்காமல் அந்த நபருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.அடிக்கடி அந்த நபருடன் வெளியே சென்று வருவதாகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் இந்த விசயத்திற்காக கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகவும் தெரியவருகிறது.இதன் காரணமாக கள்ளக்காதலனை பிரிய மனம் இன்றி கணவன் தூங்கும் சமயத்தில் அவர் மீது பெட்ரோல் ஊற்றி ஏறிய விட்டுள்ளார் மனைவி.

அதன் பிறகு அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டாள் என்றும், உடல் முழுவதிலும் தீ பற்ற ஆரம்பித்த பாண்டி அலறி துடித்துள்ளார்.அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்,பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சேர்த்தனர்.

பின்னர் அவரிடம் எழும்பூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி வாக்குமூலம் வாங்கிக்கொண்டார்.இந்த நிலையில் பாண்டி சிகிச்சை பலனின்றி அதிகாலையில் உயிரிழந்தார்.அதனை தொடர்ந்து பாண்டியின் மனைவியின் மீது கொலை வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

Exit mobile version