Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

No means No என்னும் டயலாக்கிற்கு ஏற்றவாறு பாலியல் தொல்லை கொடுத்த கணவனை ஆணுறுப்பில் அடித்து கொலை செய்த மனைவி?

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சுந்தர் என்கிற சுதீர் வசித்து வருகின்றார்.இவருக்கு வயது 34.இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு அருள்செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.இருவருக்கும் ஜெய்ஸ்ரீ என்ற மகள் உள்ளார்.

சுந்தர் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்.இவரின் மனைவி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4மணி அளவில் கட்டிலிலிருந்து கீழே விழுந்து மயங்கியதாக கூறி மருத்துவமனையில் சுந்தரின் பெற்றோர் அனுமதித்துள்ளனர்.சுந்தரை பரிசோதித்த மருத்துவர்கள் இவரின் ஆணுறுப்பில் அடிப்பட்டுள்ளதாகவும் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் கூறினர்.

இதில் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அவ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுந்தரின் மனைவியான அருள்செல்வி இடம் விசாரணை செய்தனர். இதில் அருள்செல்வி தனக்கு பாலியியல் தொந்தரவு அதிகம் கொடுத்ததாகவும், அதனால் ஆணுறுப்பில் அடித்து கொலை செய்தாகவும் கூறியுள்ளார்.உடற்கூறு ஆய்வு நடந்த பின்பு அவர் எப்படி இறந்தார் என்பது முழுமையாக தெரியவரும்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தரின் மனைவியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version