சேலம் மாவட்டத்தில் கணவர் தாக்கியதில் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

0
134
A curry shop worker died suddenly in Erode district! The people of the area are afraid of the mystery of death!

சேலம் மாவட்டத்தில் கணவர் தாக்கியதில் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாயக்கம்பட்டி கரிகாலன் கொட்டை பகுதி சேர்ந்தவர் செம்பலிங்கம். இவரது மகன் மணிகண்டன் (34). மணிகண்டன் கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அதனால் அதே ஊரில் கொல்லப்பட்டறை தெருவை  சேர்ந்த அகல்யா (29) என்பவரை 2018 ஆம் ஆண்டு காதலித்து இரு வீட்டார் சமணத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அகல்யா தனது அம்மா விவசாய நிலத்தை விற்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பாகவே  அவரது  கணவரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நிலம் விற்கும் பணத்தில் அகல்யாவிற்கு  சேர வேண்டிய பங்கு தொகையை வாங்கி வரும்படி அகல்யாவின் கணவர் மணிகண்டன் துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த சொத்து காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அதே  போல்  இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகளப்பாக மாறி மணிகண்டன் அகல்யாவை தாக்கினார். அதில் அகல்யா காயம் அடைந்தார்.

ஆனால் அகல்யா அந்த காயத்திற்காக எந்த ஒரு சிகிச்சையும் எடுக்கப்படாமல் வீட்டிலேயே இருந்தார். மேலும்  எதிர்பாராத விதமாக அகல்யாவின் தாய் அகல்யாவின் வீட்டிற்கு வந்தார் அப்போது அகல்யாவிற்கு ஏற்பட்டுள்ள காயத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும்  அகல்யாவின் தாய் உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அகல்யாவை அழைத்துச் சென்று சேர்த்தார். அங்கு அகல்யாவிற்கு சிகிச்சை தருவதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தால் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சேர்க்க மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

மேலும் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அகல்யா கொண்டு செல்லப்பட்டார். திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அகல்யா உயிரிழந்தார் இதனையடுத்து அகல்யாவின் தாய் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் அகல்யாவின் கணவர் மணிகண்டன் தலை மறைவு ஆகிவிட்டார். இந்த புகாரின் பேரில் அகல்யாவின் கணவர் மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.