பதினெட்டாம் தேதி விடுமுறை அளிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசின் பதில் !
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறையாக வெடித்தது. அப்போது அந்த பள்ளிகளை மாணவர்கள் மற்றும் தன்னார்வளர்கள் ,பொதுமக்கள் போன்றவர்கள் அங்குள்ள பொருட்களை சூறையாடினார்கள். அப்போது பள்ளியில் இருந்த பஸ்கள், வகுப்பறை கண்ணாடியால், மேஜை போன்ற பொருட்களை உடைத்தெறிந்தனர்.
மேலும் பள்ளி வாகனங்கள் அனைத்திற்கும் தீ வைத்து கொளுத்தினார்கள். இதனையடுத்து தனியார் பள்ளிகள் சங்கங்கள் இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தது மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்திருப்பதாக கூறி கடந்த 18ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் செயல்படாது என அறிவித்திருந்தது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டனர். ஆனால் அதனையும் மீறி தமிழ்நாட்டில் 987 தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தது.
மேலும் பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர்கள் எண்ணிற்கு பள்ளிக்கு வர வேண்டாம் என குறுஞ்செய்தி மட்டும் அனுப்பியிருந்தது. இதனையடுத்து விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது 18ஆம் தேதி விடுமுறை அறிவித்திருந்ததற்கு பதில் ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலை நாட்கள் ஆக செயல்பட வேண்டும் எனவும்தனியார் பள்ளிகள் விளக்கம் அளித்தனர்.
மேலும் இந்த விளக்கத்தை மெட்ரிக் பள்ளி இயக்குனர் ஏற்றுக்கொண்டது.பின்னர் கள்ளக்குறிச்சி சம்பவம் அரங்கேறிய மறுநாள் விடுமுறை விடப்பட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பட மாட்டாது என தற்போது அறிவித்துள்ளது அரசின் எச்சரிக்கையை மீறி விடுப்பு அறிவித்திருந்தால் 987 தனியார் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.