கோவை தொகுதியை தன்வசப்படுத்துவாரா அண்ணாமலை? வெளியான கருத்துக்கணிப்புகள்!!
கோவை நாடாளுமன்ற தொகுதியில் மும்முனை போட்டி தீவிரமாக உள்ள நிலையில்,யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதியான கோவையில்,களம் சூடுபிடித்துள்ளது. காரணம் 3 வேட்பாளர்கள் இங்கு கடுமையான போட்டியில் உள்ளனர். திமுகவில் கணபதி ராஜ்குமார் ஏற்கனவே களத்தில் இறங்கி தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.அதேபோல அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன்,சமூக ஊடகங்களிலும்,இளைஞர்கள் மத்தியிலும் நல்ல செல்வாக்கு பெற்றுள்ளார்.
பாஜகவின் அண்ணாமலையும் ஏற்கனவே பிரபலம் என்பதால்,அதன் மூலமும், கள வேலைகள் மூலமும் கோவை தொகுதியில் ஸ்டாராங்கான வேட்பாளராக உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணியும் இவர்கள் மூவருக்கும் ஈடுகொடுக்கிறார்.
கருத்துக்கணிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்கும் ETG,கோவை தொகுதியின் நிலவரம் பற்றிய கணிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி, பாஜக வேட்பாளரான அண்ணாமலை 44% வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் கணபதி ராஜ்குமார் 27% வாக்குகளும், அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் 8% வாக்குகளும்,நாம் தமிழர் கட்சியின் கலாமணி 9% வாக்குகளும் பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பின்படி கோவையில் உள்ள 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறார் அண்ணாமலை.
திராவிட கட்சிகளின் வெற்றி கோட்டையாக இருந்த கோவை தொகுதி,இந்த தேர்தலில் பாஜகவுக்கு சென்றுவிடுமோ? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு மக்களவை உறுப்பினர் கண்டிப்பாக வேண்டும் என்ற பாஜகவின் நோக்கம் நிறைவேறுமா? என்ற கேள்விக்கு தேர்தல் முடிவுகளே சாட்சி.