உலக அளவில் மெட்டா நிறுவனமானது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸப் ஆகிய ஆப்ஸ்களை நிர்வகித்து, செயல்படுத்தி வருகின்றது. இந்தியாவில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் 35 கோடிக்கு மேலும், instagram செயலியை 36 கோடிக்கு மேலும், இந்தியாவிலேயே அதிகமாக பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியானது 50 கோடி மக்களுக்கு மேலும் பயன்படுத்தி வருகின்றனர். தற்சமயம் தீர்ப்பாணயம் மெட்டா, whatsapp நிறுவனங்களுக்கு இடையே தகவல் பரிமாற்ற தடையை நீக்கி உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு வாட்ஸப் தங்கள் பயனர்களின் கொள்கையை மாற்றிப் புதுப்பித்து இருந்தது. இந்த புதுப்பித்தல் மூலம் வாட்ஸ்அப் பயனார்களின் டேட்டாவை மெட்டா நிறுவனத்தின் மற்ற தரவுகளில் விளம்பரங்களுக்காக பகிரப்பட்டு வருவதை கண்டறிந்துள்ளது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடந்து வருகின்றது. இந்திய போட்டி ஆணையம் (CCI) இதனால் மெட்டா நிறுவனத்திற்கு 2024 ஆம் ஆண்டு நவம்பர் தடை விதித்திருந்தது. இந்த தடைக்கு மெட்டா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து CCI யிடம் போதிய தொழில்நுட்ப வல்லுனர்கள் கிடையாது.
மேலும், இந்த தடையின் மூலம் செயலியில் குறிப்பிட்ட வசதிகளை செய்ய இயலாது எனவும் குற்றச்சாட்டு வைத்து தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் (NCLD) மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த NCLD, CCI யின் தடையை ரத்து செய்து, மேல் விசாரணை செய்து வருகின்றது. மேலும் CCI யின் தடையினால் whatsapp நிறுவனத்தின் வணிக உத்திகள் சீர்குலைந்து விடும் என்னும் விளக்கத்தை வெளியிட்டுள்ளது NCLD. இந்த தடை ரத்து குறித்து மெட்டா நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சியில் அடுத்த கட்ட ஆலோசனையை தொடங்கியுள்ளது.