Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு! இனியும் அவர் அமைச்சரவையில் இருக்கலாமா முதலமைச்சரை சீண்டும் பாஜக!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து மோசடி செய்த வழக்கில் இருந்து விடுவிக்க கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் செந்தில் பாலாஜி மைதான புகார்களை மீண்டும் புதிதாக விசாரணை செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு நீதிபதிய உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவாரா முதலமைச்சர் ஸ்டாலின்? என்று பாஜக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியீட்டுள்ள முகநூல் பதிவு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மோசடி செய்து விட்டார் என்று குற்றம் சாட்டிய தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினால் மீண்டும் அமைச்சராக்கப்பட்ட செந்தில் பாலாஜியை அந்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கிறது என்றும், மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இனியும் செந்தில் பாலாஜி தமிழக அமைச்சராக நீடிப்பது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இடுக்குதான் இந்த அரசின் மாண்பு மதிப்பு எல்லாமே நீதிமன்ற உத்தரவால் காட்டில் பறக்கக்கூடிய நிலையில் அமைச்சரவையில் இருந்து நீக்குவாரா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்

Exit mobile version