தினமும் 1 கிளாஸ் “கொத்தமல்லி விதை டீ” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

0
93
#image_title

தினமும் 1 கிளாஸ் “கொத்தமல்லி விதை டீ” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

நம் உணவின் வாசனையை கூட்டும் கொத்தமல்லி ஒரு மூலிகை ஆகும். இவை நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

கொத்தமல்லி விதையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:-

இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம், புரோட்டீன், வைட்டமின் ஏ, பி1 உள்ளிட்டவைகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த கொத்தமல்லி விதையை வைத்து தேநீர் செய்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.

கொத்தமல்லி விதை தேநீர் பயன்கள்:-

** கொத்தமல்லி விதையில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கண் தொடர்பான நோய் பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.

**தினமும் கொத்தமல்லி டீ பருகுவதன் மூலம் உடல் எலும்பு வலுப்பெறும்.

**பெண்கள் ஏற்படும் வெள்ளைப்படுதல் பாதிப்பை சரி செய்ய கொத்தமல்லி டீ பெரிதும் உதவுகிறது.

**இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கொத்தமல்லி டீ பருகுவது நல்லது.

**இரத்த சோகை பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு கொத்தமல்லி டீ சிறந்த தீர்வாக இருக்கும்.

**தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வாயுத் தொல்லையை சரி செய்ய கொத்தமல்லி டீ பெரிதும் உதவும்.

**உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் பானமாக இவை இருக்கிறது.

**மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

**செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கு கொத்தமல்லி டீ சிறந்த தீர்வாக இருக்கும்.

**உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொத்தமல்லி டீ வழங்குகிறது.

கொத்தமல்லி விதை டீ தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*கொத்தமல்லி விதை

*பனங்கற்கண்டு

*தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 தேக்கரண்டி அளவு இடித்த கொத்தமல்லி விதைகளை சேர்க்கவும்.

இதைத் தொடர்ந்து சுவைக்காக சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.