ஜிஎஸ்டி நிதியுதவி இம்முறை மாநிலங்களுக்கு கிடைக்குமா ?? ஒரு லட்சம் கோடியை தாண்டியதின்னால் எதிர்பார்ப்பு !!

0
149

இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்கு நாட்டின் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதினால் , தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர செயல்படுகள் ஆகியவற்றை அனைத்தும் பெரும் இழப்புகளை சந்தித்து வந்தனர். அப்போது அரசுக்கு கூடுதலான செலவினங்களும் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கிடைப்பதில் கடினமாக இருந்தது. இதனால் மாநில அரசுக்கும் ஜிஎஸ்சி தொகையை விடுவிக்க மத்திய அரசு இயலாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்பொழுது ஜிஎஸ்டி குறித்து மத்திய நிதி அமைச்சகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூபாய் ஒரு லட்சம் கோடியை தாண்டி இருந்ததாகவும், அதன் பின்னர் கொரோனாவால் பொருளாதாரம் பெரும் இழப்பை சந்தித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 8 மாதங்களுக்கு பிறகு ஜிஎஸ்டி வசூல் மீண்டும் ரூபாய் ஒரு லட்சம் கோடி கோடியை தாண்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டு 2020 அக்டோபர் 31 -ஆம் தேதி நிலவரப்படி ஜிஎஸ்டி ஆர் – 3 பி படிவ கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 80 லட்சமாக இருந்ததாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் அக்டோபரில் மொத்த ஜிஎஸ்டி வசூலாக வந்த ரூபாய். 1,05,155 கோடியில் சிஜிஎஸ்டி (CGST) ரூபாய். 19,193 கோடியாகவும் ,எஸ்ஜிஎஸ்டி (SGST) ரூபாய் 5,411 கோடியாகவும், ஐஜிஎஸ்டி (IGST ) ரூ. 52,540 கோடியாகவும் ,தீர்வை தொகையாக ரூபாய். 8,011 கோடியாகவும் இருந்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது.

மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.95,379 கொடியை ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டு அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வசூலானது 10 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.