சிவாஜி செய்ததை நினைத்துப் பார்த்து கமல் இதை செய்வாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகத் நடிக்கத் தொடங்கி, இன்று வரை உலக நாயகனாக இருந்து வருகிறார். தமிழில் முதன்முதலாக ‘களத்தூர் கண்ணம்மா’வில் நடிக்கும்போது அவருக்கு 6 வயது. அந்தப் படத்திலேயே அவர் ‘இந்திய தேசிய விருதைப்’ பெற்றார்.
தன் வாழ்க்கையை அவர் திரைத்துறைக்கே அர்பணித்தார். 4 முறை தேசிய விருதும், 18 முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றுள்ளார். நடிப்பைத் தவிர, அவர் பல படங்களுக்கு, பாடல்களும் எழுதி இருக்கிறார்.
தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட பல படங்களில் நடித்தும், பாடல்களையும் எழுதியும் உள்ளார். சகலகல்லா வல்லவரான அவர் பரதநாட்டிய கலைஞராகவும், நடனக்கலைஞராகவும் இருந்துள்ளார்.
ஒரு சேனலுக்கு சித்ரா லட்சுமணன் பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
சிவாஜி புரடக்ஷன் என்ற பெயரில் கமலை வைத்து நிறைய படங்களை வெளியிட்டுள்ளது. சிவாஜி மறைவிற்கு பிறகு அந்த புரடக்ஷன் மூலம் தயாரிக்கப்படும் படங்கள் மிகவும் குறைந்துவிட்டது.
சிவாஜி பெயரை பிரபு ஓரளவு காப்பாற்றிவிட்டார். ஆனால், அவரது மகனான விக்ரம் பிரபு சிவாஜி நடிப்பில் வெளியாகும் படம் அந்த அளவிற்கு சரியாக ஓடுவதில்லை.
இந்நிலையில், விக்ரம் பிரபுவுக்காக கமல் தன்னுடைய புரடக்ஷன் கம்பெனி மூலம் ஏதாவது ஒரு படத்தை தயாரிக்கலாம் என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
ராஜ்கமல் புரடக்ஷன் சார்பில் தயாராகும் படங்கள் அனைத்தும் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. அதனால்கூட விக்ரம் பிரபுவை வைத்து கமல் படம் தயாரிக்காமல் இருந்திருக்கலாம் என்று சித்ரா லட்சுமணன் கூறினார்.