தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு செவிகொடுப்பாரா மோடி! காரசாரமாக நிகழும் சந்திப்பு!

0
129
Consultation meeting started! Will NEET Exempt?

தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு செவிகொடுப்பாரா மோடி! காரசாரமாக நிகழும் திடீர் சந்திப்பு!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர் பர்க்காத விதம் அதிக அளவில் திமுக 159 இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.வெற்றி வாகை சூடிய பிறகு நமது முதல்வர் ஐந்து அறிக்கைகளில் கையெழுத்திட்டார்.ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆன பிறகு முதல் முதலாக சென்ற மாதம் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் காண சென்றார்.இந்த சந்திப்பில் தமிழ்நாட்டில் உள்ள கோரிக்கைளை நிறைவேற்றும் விதமாக மனு ஒன்றை மோடியிடம் கொடுத்தார்.அந்த மனுவில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, நீட் தேர்வை தகற்றும் படியும்,கூடுதல் தடுப்பூசியை விநியோகிக்கப்படும் படியும்,டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தக்கூடிய ஹைட்ரோகார்பன் திட்டம் தகற்ற கோரியும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு கொடுத்து ஓர் மாதம் காலம் ஆகியும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.நீட் தேர்விற்கான அறிவிப்புகளையும் கூட வெளியிட்டுவிட்டனர்.தற்போது தமிழகம் தடுப்பூசி இன்றியும் தவித்து வருகிறது.மூன்று நாட்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக சென்னையில் நிறுத்தி வைக்கப்படிருந்தது.மக்கள் மூன்று நாட்களாக தடுப்பூசி எப்பொழுது போடப்படும் என்ற அறிவிப்பிற்காக காத்துக்கொண்டிருந்தனர்.

அந்தவகையில் சென்னை மாநகராட்சி நேற்று முன்தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில் நாளை அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என கூறியிருந்தனர்.ஆனால் முகாம் திறந்த ஓர் நாளிலேயே தடுப்பூசி அனைத்தும் தீர்ந்துவிட்டது என கூறி மீண்டும் முகாம்களை தற்காலிகமாக மூடிவிட்டனர்.மக்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.தற்பொழுது தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி ஏதும் வழங்காமல் ஒன்றிய அரசு தாமதம் செய்து வருகிறது.அதுமட்டுமின்றி முதல்வர் நீட் தேர்வை ரத்து செய்யும் படியும் மோடியிடம் கூறியிருந்தார்.ஆனால் எந்தவித திட்டத்தையும் தமிழ்நாட்டிற்கு பிரதமர் அமல்படுத்தவில்லை.

அந்தவகையில் தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை டெல்லி செல்ல உள்ளார்.நாளை டெல்லி சென்று மாலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மோடியை தமிழ்நாட்டின் ஆளுநர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.இந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் தட்டுப்பாட்டை எடுத்து கூறுவார் என அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.குறிப்பாக நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி,தடுப்பூசி அதிகரிப்பு போன்றவற்றை வேண்டுகோள் விடுப்பார் எனவும் கூறுகின்றனர்.நாளை மறுநாள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஆளுநர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.