Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீட் தேர்வுக்கு விலக்கு வழங்கப்படுமா? திமுகவின் எம்பிக்கள் அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு!

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு அறிமுகம் செய்யப் பட்டதில் இருந்து அந்த நீட் தேர்வை எழுதி அதில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் மருத்துவ படிப்புக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை இதன் காரணமாக அதிக அளவில் பணம் செலவு செய்து பயிற்சி மையம் சென்று படிக்கும் வசதி படைத்த மாணவர்கள் எளிதாக நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ இடத்தை பெற்று விடுகிறார்கள்.

ஆனால் தமிழகத்தின் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் நீட் தேர்வு தயாராகும் விதத்தில் வசதி இல்லாத காரணத்தால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற இயலாத சூழ்நிலை இருக்கிறது மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு நீட் தேர்வு தடையாக இருக்கிறது இதன் காரணமாக மருத்துவ மாணவிகள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இதன் காரணமாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வழங்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குளிர்கால கூட்டத் தொடரில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டார்கள் தமிழக அரசின் தொடர் முயற்சிக்கு வெற்றி கிடைக்காமல் இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் இன்று திமுகவின் மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு தலைமையில் திருமாவளவன் வெங்கடேசன் நவாஸ் கனிமொழி உள்ளிட்டோர் அடங்கிய குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இருக்கிறது அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வழங்கவேண்டும் என்று வலியுறுத்த இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version