Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆக்சிஜன் உற்பத்தி துவங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு!

Will oxygen production start? People expect!

Will oxygen production start? People expect!

ஆக்சிஜன் உற்பத்தி துவங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு!

கொரோனாவின் இரண்டாவது அலையில் கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில், மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் மிகவும் அவதியுறுகின்றனர்.சிலபேர் ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தினால் உயிரிழக்கவும் நேரிடுகிறது.

இந்நிலையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஆக்சிஜன் தயாரித்து வழங்குவதற்காக அனுமதி கோரியிருந்தது.

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதியளித்து ஆணை பிறப்பித்தது.தமிழக அரசும் இதை செயல்படுத்த அனுமதியளித்தது.இதனை தொடர்ந்து கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்த ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது.அங்கு உற்பத்தி செய்த ஆக்சிஜனை வெளியில் எடுத்து வர பிரத்யேக டேங்கர் லாரிகளும், ஆலைக்கு கொண்டு வரப்பட்டது.

நேற்று காலை 7 மணிக்கு அந்த ஆலையில் உற்பத்தி செய்த ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி துவங்கியது.அந்த லாரி வெளியே செல்லும் போது ஸ்டெர்லைட் கண்காணிப்பு குழு தலைவரும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அந்த டேங்கர் லாரியானது போலீஸ் பாதுகாப்புடன் வெளியே சென்றது.முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 5 டன் ஆக்சிஜன், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், பின்னர் சென்னை,கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், அந்த ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புக் கூடாரத்தில் உள்ள குளிவிப்பான்(Coolar) பழுதாகி நின்றதால், நள்ளிரவு முதல் ஆக்சிஜன் உற்பத்தி தடைப்பட்டு உள்ளதாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்தது.

மேலும் இதுபற்றி கூறுகையில் மீண்டும் இயந்தரத்தை சரி செய்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய 2 முதல் 3 நாட்கள் ஆகும் என்பதால், அடுத்த 3 நாட்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படுகிறது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version