Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த நாள் முதல் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படாது!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!!

Will ration shops be open or not on this day across Tamilnadu!! FAMILY CARDHOLDERS!!

Will ration shops be open or not on this day across Tamilnadu!! FAMILY CARDHOLDERS!!

இந்த நாள் முதல் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படாது!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!!

ரேஷன் கடை ஊழியர்கள் பல நாட்களாக தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டு வருகின்றனர்.அந்தவகையில் அவர்கள் கூறுவது, நியாயவிலைக்கடைகள் முலம் காலியாக உள்ள கட்டுநர்கள்,  விற்பனையாளர்கள், உள்ளிட்ட காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுப்பது, பொது விநியோக திட்டத்திற்கு தனியாக துறை அமைக்குமாறும், ரேஷன் பொருள்களை பொட்டலங்களாக வழங்க வழி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு முறை பில் போடும் முறையை ரத்து செய்வது மட்டுமில்லாமல்  21  அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

அந்தவகையில் ஜூன் 9 ஆம் தேதி மாநில சார் பதிவாளர் அலுவலகம் முன் இந்த  கோரிக்கைகளை முன் வைத்து நியாயவிலைக்கடை ஊழியர்கள் மறியல் போராட்டத்தை நடத்த  முடிவெடுத்துள்ளனர்.இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதி நியாயவிலைக்கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வந்த நிலையில் நியாய விலைக்கடைகள் இயங்குமா என்பதில் சந்தேகம் தான்.

Exit mobile version