சமந்தாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுமா? ஹைட்ரஜன் பெராக்சைடால் வெடித்த சர்ச்சை!!
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மக்களுக்கு தவறான சிகிச்சை முறைகளை பற்றி கூறி வருகிறார் என மருத்துவர் ஒருவர் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சமந்தா அவர்கள் தமிழில் விஜய்,சூர்யா மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பெரிய நடிகர்களுடன் நடித்த படங்களில் இவரது நடிப்பு, ரசிகர்களை கவரும் வகையில் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும்.அதுமட்டுமில்லாமல் இவர் நயன்தாராவைப் போல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வந்தார்.
இவர் தெலுங்கில் நாக சைதன்யாவுடன் நடித்து கொண்டுயிருந்தபோது இருவரும் நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டு நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்தனர்.திருமணத்திற்கு பின்னும் சமந்தா தொடர்ந்து நடித்து வந்தார்,ஆனால் இது நாக சைதன்யாவின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என தெரிகிறது.இதனால் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று தனித் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சமந்தா மயோசிடிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருப்பதால் படங்களில் நடிப்பதை கொஞ்சமாக குறைத்து கொண்டார்.அவர் சுவாச வைரஸ் தொற்று நோயை குறைப்பதற்க்கு ,மக்கள் எல்லோரையும் ஹைட்ரஜன் பெராக்சைடை சுவாசிக்கும்படி கூறியுள்ளார்.இது தான் தற்பொழுது பூகம்பமாக கிளம்பியுள்ளது.
இதுகுறித்து, லிவர் டாக் என்னும் மருத்துவர் ஹைட்ரஜன் பெராக்சைடை சுவாசிக்க சொல்லுவது முற்றிலும் தவறானது எனவும்,பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான ரீதியான ஒரு முற்போக்கான சமூகத்தில், பொது சுகாதாரத்திற்கு இது ஆபத்தை விளைவிக்கும் செயல் என கடுமையாக சாடியுள்ளார்.இதுகுறித்து இந்தியாவின் சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.