தமிழகம் முழுவதும் சுழற்சி முறையில் பள்ளிகள் நடத்தப்படுமா? பெற்றோர்களின் கோரிக்கை!
தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒரு சில நோய் தொற்றுகள் புதிதாக ஏற்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பள்ளிகளிலும் முககவசம் கட்டாயமாகப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில பள்ளிகளில் முக கவசம் அணியாவிட்டாலும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் குழந்தைகளுக்கு எளிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் எனவும் பெற்றோர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் ஒரு சில தனியார் பள்ளி நிறுவனங்கள் நேரடி வகுப்புகளை சுழற்சி முறையில் மாற்றலாம் எனவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற அடிப்படையில் வகுப்புகள் நடத்தலாம் எனவும் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையானது அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.