Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி சிம்புக்கு கல்யாணமே நடக்காதா?

#image_title

இனி சிம்புக்கு கல்யாணமே நடக்காதா?

நடிகர் சிலம்பரசன் அவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு கல்யாண யோகம் இனி இல்லை என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இன்று உச்ச நட்சத்திரமாக வளர்த்து நிற்பவர் நடிகர் சிலம்பரசன் அவர்கள். உறவில் காத்த கிளி படத்தில் மிகச்சிறு குழந்தையாக திரையில் தோன்றி படிபடியாக வளர்ந்து மைதிலி என்னை காதலி, என் தங்கை கல்யாணி, சபாஷ் பாபு, ஒரு வசந்த கீதம் என தொடர்ந்து தந்தை டி. ராஜேந்தர் அவர்களின் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். நடிகர் சிலம்பரசன் அவர்கள் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது அவருக்கு நிறைய ரசிக்கப் பட்டாளம் உண்டு.

40 வயது கடந்துள்ள நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் ஒரு சில பெண்களை அவர் காதலித்து உள்ளார். ஆனால் திருமணத்திற்கு அது கைக்கூடவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா அவர்களை நடிகர் சிம்பு காதலித்து வந்தார், ஆனால் அதுவும் திருமணத்திற்கு கைக்கூடவில்லை. நடிகை நயன்தாரா, நடிகை ஹன்சிகா ஆகியோரின் காதலும் திருமணம் வரை செல்லவில்லை.

தற்போது காதலியும் வேண்டாம், காதலும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம் என்று நிலையில் நடிகர் சிலம்பரசன் அவர்கள் வாழ்ந்து வருகிறார். தனது ரசிகர்களுக்காக மட்டுமே சினிமாவில் தான் நடிப்பதாக சிலம்பரசன் அவர்கள் பெருமிதத்துடன் பல இடங்களில் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜோசியத்தின் வல்லுநரான இயக்குனர் டி.ராஜேந்திரன் அவர்கள் தன் மகனின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்துள்ளார். இதில், தனது மகனுக்கு திருமண யோகம் இல்லை என தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இனி என்ன செய்வது என்று தெரியாமல் தந்தையான டி. ராஜேந்திரன் அவர்களும், தாயான நடிகை உஷா அவர்களும் குழம்பி போய் உள்ளனர்.

 

 

Exit mobile version