தமிழக அரசு நிர்ணயித்த டார்கெட்டை டாஸ்மாக் தொட்டு விடுமா? 2 நாளில் ரூ.464 கோடி!
பண்டிகை காலங்களில் தமிழகத்தில் மது விற்பனையானது தினசரி நாட்களை விட அதிகமாக இருக்கும். தமிழகத்தின் வருவாயே இதிலிருந்து தான் ஈட்டுகின்றனர் என்பது சொல்லப்படாத உண்மை.
அந்த வகையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு சில தொகையை நிர்ணயித்து விற்பனை செய்ய வேண்டும் என கூறியது. இவ்வாறு குடிப்பதற்கு தமிழக அரசு நிர்ணயிப்பது முற்றிலும் கேடு என பாமக தலைவர் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் உள்ள தீபாவளி பண்டிகை ஒட்டி கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 464 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் ரூ.90.16 கோடிக்கு விற்பனை என கூறியுள்ளனர். கோவையில் 51 கோடி என்றும் மதுரையில் 55 கோடி என்றும் சேலத்தில் 52 கோடிக்கு விற்பனையாகியுள்ளது எனக் கூறியுள்ளனர்.
மற்ற மாவட்டங்களை விட இருப்பதிலேயே சென்னையில் தான் அதிக அளவிற்கு மது விற்பனை ஆகி இருக்கிறது. அது மட்டும் இன்றி கடந்த தீபாவளி பண்டிகை என்று ஒரு 437 கோடிக்கு ஆன நிலையில் தற்போது அதனை தாண்டி 464 கோடியாக உள்ளது.