பாஜக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறதா தேமுதிக கட்சி?

0
298
#image_title

பாஜக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறதா தேமுதிக கட்சி?

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சி- அதிமுக கட்சியுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் தேமுதிகவுக்கு மாநிலங்களவையில் பதவி தர மறுத்ததால் அதிமுக உடனான பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டதாக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுவரை அதிமுகவுடன் தேமுதிக இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இரண்டு கட்டத்திலும் தேமுதிகவின் கோரிக்கை அதிமுக ஏற்க்கவில்லை எனவே தேமுதிக இதுவரை அதிமுகவுக்கு மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கவில்லை.

இந்தநிலையில், தான் தற்போது தேமுதிக கட்சி பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்களவை பதவி வழங்க வேண்டும் என்று உறுதியாக இருக்கும் தேமுதிக பொதுசெயலாளர் பிரமலதா விஜயகாந்தை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்று சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னரே தேமுதிக அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்திக்குமா? அல்லது பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்குமா ?என்பது தெரியவரும்.