வெயிலில் முகம் கருத்து போகுதா? இந்த பேக் வாரத்தில் 2 முறை try பண்ணுங்க!
வெயிலின் தாக்கம் இப்பொழுது அதிகமாக உள்ளது இதனால் சருமப் பிரச்சினையில் இருந்து நம் முகத்தை பாதுகாக்க எளிய பயனுள்ள ஃபேஸ் பேக்குகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்..
1. ஆரஞ்சு தோல் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
முதலில் ஆரஞ்சு தோலை வெயிலில் நன்றாக உலர்த்திக் கொள்ளவும். காய்ந்தவுடன் அதை மிக்ஸியில் நன்றாக அரைத்து பவுடர் போல் எடுத்துக் கொள்ளவும். ஆரஞ்சு தோல் பவுடர் உடன் சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை நன்றாக கழுவி விட்டு இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் பூசிக்கொள்ளவும். சிறிது நேரம் கழித்து நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
இப்பொழுது பொலிவான முகம் காணப்படும். இதில் ஏற்படும் நன்மைகள் என்னவென்றால் முகத்தில் உள்ள கருமைகள் நீங்கி முகம் பொலிவு பெறும். இயற்கையான பொருட்களை பயன்படுத்தி நாம் சரும பிரச்சனைல இருந்து விடுபடலாம். .
2. புதினா ஃபேஸ் பேக்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் புதினா இலைகளை வைத்து ஃபேஸ் பேக் செய்யலாம். . புதினா இலைகள் உண்பதற்கு மட்டுமல்லாமல் சருமத்திற்கும் நல்ல பயன் தரும்.
புதினா இலைகளை அரைத்து எடுத்து அதனுடன் சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக கலந்ததும் அதனை முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் புத்துணர்ச்சி ஏற்படும் உடனடி பொழிவை பெற இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம் இதனால் முகத்தில் உள்ள சருமத்துளைகளில் இருந்து வரும் பருக்களை தடுக்கலாம்.
3. எலுமிச்சை மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
ஒரு கிண்ணத்தில் தயிர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும் அதனுடன் பாதி அளவு எலுமிச்சை பழச்சாற்றை எடுத்து கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் வரை உலர விடவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும்.
இந்த ஃபேஸ் பேக் முகப்பருக்களை குறைத்து முகத்தை அழகாக பாதுகாக்கும் இந்த ஃபேஸ் பேக்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்தலாம்.
இதை மட்டும் பின்பற்றாமல் இதனுடன் அதிகமான தண்ணீரை குடிக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் இருந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து விடும்.