Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்கள் அதிர்ச்சி அதிபர் திடீர் பதவி விலகலா?

மாலி என்ற நாடு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது அங்கு கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 77 சதவீத வாக்குகள் பெற்று இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மீண்டும் 2018-ல் நடந்த தேர்தலிலும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக அந்நாட்டு மக்கள் 2 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மாலி ராணுவத்தினரில் ஒரு பிரிவினர் திடீரென கிளர்ச்சியாளர்களாக மாறி புரட்சியில் ஈடுபட்டனர்.

தலைநகர் பமாகோவை ஆக்கிரமித்த கிளர்ச்சி ராணுவ வீரர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே சென்றனர். மேலும், ராணுவ டாங்கிகள் நகரத்தில் வலம் வந்தன.  இதன் அந்நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இந்த நிலையில் ராணுவத்தினரின் பிடியில் உள்ள அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா நேற்று தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் பேசும்போது  நான் உடனடியாக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன், ராஜினாமா அமலுக்கு வருகிறது. நாடாளுமன்றமும் கலைக்கப்படுகிறது என்று கூறினார்.

Exit mobile version