அமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிமுக எம்எல்ஏ!

0
179

தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளராக இருந்து வந்த ராஜவர்மன் சாத்தூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருந்தாலும் அதற்கு பின்னர் அமைச்சருக்கும், ராஜவர்மன் அவர்களுக்கும் இடையே தொடர்ந்து உரசல்கள் ஏற்பட்டது. அமைச்சர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தார் ராஜவர்மன் இதற்கிடையில் நேற்று வெளியிடப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ராஜவர்மன் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் நேற்றையதினம் ராஜவர்மன் தெரிவித்ததாவது சாத்தூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியடைந்து மக்களுடன் மக்களாக நான் பணியாற்றி வந்தேன். என்னுடைய செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை இந்த பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து கட்சியினருக்கும் மற்றும் பொது மக்களுக்கும் நன்றாகவே அறிவார்கள் என தெரிவித்திருக்கின்றார்.

இருந்தாலும் இந்த மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஏவல்களாக இருந்து வரும் ஒரு சிலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர் கொலை மிரட்டல் விடுத்ததற்கான அனைத்துவிதமான ஆதாரங்களையும் நான் வைத்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னரே தமிழக அளவில் மிகப்பெரிய பிரச்சனை இருந்து வருகிறது. ஏனென்றால் அவருடைய பத்திரிக்கை பேட்டியில் அவர் தெரிவிக்கும் ஒவ்வொரு கருத்தும் சர்ச்சையாக மாறி வருகிறது. இதனால் கடுப்பான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரிடமிருந்த மாவட்ட செயலாளர் என்று பொறுப்பை பறித்து விட்டார்.

அதோடு மட்டுமல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பற்றி தமிழகம் முழுவதிலுமே பிரச்சாரம் செய்து வருகின்றார். இதெல்லாம் போதாது என்று இப்போது இந்த விவகாரம் வேறு வந்திருக்கிறது.

தேர்தல் சமயத்தில் அமைச்சர் மீது இவ்வாறு ஒரு குற்றச்சாட்டு எழுந்திருப்பது அதிமுகவிற்கு ஒரு பலத்த அடியாகவே காணப்படுகிறது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எவ்வாறு கையாளப் போகிறார் என்பது தெரியவில்லை