நோய் தொற்றின் மூன்றாவது அலை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

0
113

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்திருக்கிறது. தற்போது இருக்கும் நிலவரப்படி 7000 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதிப்புகள் படிப்படியாக குறைந்து கொண்டே செல்வதால் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில், இந்த நோய் தொற்றின் மூன்றாவது அலை தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 3 அல்லது 4 மாதங்களில் நோய் தொற்றின் மூன்றாவது அலை உண்டாகலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்குள்ளாக பொது மக்கள் எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கின்றது.

தற்சமயம் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மூன்றாவது அலை ஏற்பட்டால் குழந்தைகள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.எய்ம்ஸ் மருத்துவமனை பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு அதிக அளவு எதிர்ப்பு சக்தி இருப்பதன் காரணமாக குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்திருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில், மூன்றாவது அலை ஏற்பட்டால் குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என்பதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய அவர் எல்லோருமே விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் மூன்றாவது அலை எல்லா வயதினரையும் பாதிக்கும் முதல் மற்றும் இரண்டாம் அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள். குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி ஏதும் செலுத்தப்படாமல் இருப்பதன் காரணமாக, அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள் என சொல்லியிருக்கின்றார்.