கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வருமா?

0
108

பண்ருட்டி அருகில் முந்திரி ஆலையில் பணிபுரிந்த கோவிந்தராஜ் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் இவர் திமுகவை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிசிஐடி விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட இவர் சிறையில் உள்ள வழியே தொடர்ச்சியாக ஜாமின் மனுக்களை பெற்று வருகின்றார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில், கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ரமேஷ் மீது எதற்காக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை? என்று கேட்டு நாடாளுமன்ற சபாநாயகர் அவர்களுக்கு தமிழகத்திலிருந்து கடிதங்கள் வருகின்றன என சொல்லப்படுகிறது. சபையில் அவர் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவந்து அவரை பதவி நீக்கம் செய்வது தான் ஒரே வழி என்ற காரணத்தால், அந்த கடிதத்தை சபாநாயகர் அலுவலகம் எந்த ஒரு முடிவும் மேற்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து அடுத்ததாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ரமேஷ் மீதான கொலை வழக்கை காரணம் காட்டி அவர் மீது உரிமை மீறல் பிரச்சனையை எழுப்ப எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உரிமை மீறல் பிரச்சனையை கொண்டு வந்தால் பதவி பறி போக நேரிடலாம், இதனால் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும், எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.