இவர்களுக்கு தொடர்ந்து மின் திட்டங்கள் கிடைக்குமா இல்லையா? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் அனைத்து மின் இணைப்பிற்கு 100 யூனிட் மின்சார மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் கடந்த ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்ந்தது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய நடைமுறை ஒன்று அமலுக்கு வந்தது.அதில் அரசு வழங்கும் மின் மானியத்தை தொடர்ந்து பெற வேண்டுமானால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது கட்டாயமாக்கபட்டுள்ளது.
இந்த சட்டம் வந்ததில் இருந்தே மின் கட்டண அலுவலகத்தில் மக்கள் அலைமோதி வருகின்றனர்.ஒரு சிலர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்காமல் இருப்பதினால் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் ஜனவரி மாதம் வரை காலாவகாசம் வழங்கப்படும் அதனால் மக்கள் அனைவரும் தவறாமல் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று கரூரில் மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.இந்த நடைமுறை அமலுக்கு வந்ததில் இருந்து தற்போது வரையிலும் இரண்டு கோடிக்கு மேற்பட்டோர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்துள்ளனர்.
மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்கவில்லை என்றால் மின் திட்டங்கள் ரத்தாகும் என அச்சம் கொள்ள வேண்டாம்.மேலும் விவசாயிகள், விசைத்தறி, கைத்தறி மற்றும் நெசவாளர்களின் குடிசைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்,மின்சார துறையை மேம்படுத்துவதற்கு கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் ரூ 9,048 கோடி மானியம் வழங்கினார்.அதுபோலவே நடப்பாண்டில் கூடுதலாக ரூ 4,000 கோடி மானியம் வழங்கி உள்ளார்.அதனால் இந்த திட்டங்களில் எந்த ஒரு தடையும் ஏற்படாது என கூறியுள்ளார்.