Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கருப்பை எடுத்த பெண்களுக்கு உடலுறவு ஆசை ஸ்டாப் ஆகிடுமா? இயல்பான உடலுறவில் ஈடுபட முடியுமா?

ஆண் மற்றும் பெண்ணின் உடலில் ஹார்மோன் ஒரே மாதிரி இருப்பதில்லை.பெண்களுக்கு ஈஸ்டிரோஜன் ஹார்மோன் தான் அவர்களுக்கு பெண் தன்மையை கொடுக்கிறது.இந்த ஈஸ்டிரோஜன் ஹார்மோன் சினைமுட்டை பையில் உருவாகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலம் முற்றிலும் நிற்கும் வரை இந்த ஈஸ்டிரோஜன் ஹார்மோன் சுரப்பு அதிகமாக சுரக்கும்.பெண்கள் பலர் தங்கள் மாதவிடாய் காலம் நிறைவடைவதற்கு முன்னரே கருப்பையை எடுத்து விடுகின்றனர்.

இதனால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உடல் சார்ந்த பல பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.பெண்கள் இளம் வயதில் கருப்பையை எடுப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளா வேண்டியது முக்கியம்.

1)உடலில் அதிகம் வியர்த்தல்
2)மன அழுத்தம்
3)மன உளைச்சல்
4)உடல் வலி
5)மறதி
6)சிறுநீரக பாதை தொற்று
7)அதிகப்படியான கோபம்
8)எலும்பு தேய்மானம்

தவிர்க்க முடியாத சில காரணங்களால் பெண்கள் கருப்பையை அகற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.சில பெண்கள் குழந்தை பெற்ற பிறகு அதிக உதிரப்போக்கு ஏற்படுதல்,உத்திரப்போக்கின் போது அதிக வலி ஏற்படுதல் போன்ற காரணங்களால் கருப்பையை அகற்றிவிடுகின்றனர்.இதுபோன்ற சிறு காரங்களுக்காக கருப்பை அகற்ற கூடாது.

தவிர்க்க முடியாத காரணங்களால் கருப்பையை அகற்றிய பெண்களால் முன்பு போல் இயல்பாக உடலுறவு கொள்ள முடியுமா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.கருப்பையை அகற்றிய பெண்களுக்கு உடலுறவின் மீது நாட்டம் குறையுமா என்ற கேள்வியும் எழுகிறது.உண்மையில் கருப்பையை அகற்றிய பெண்கள் இயல்பாக உடலுறவு கொள்ளலாம்.அவர்களாலும் இயல்பாக உடலுறவில் ஈடுபட முடியும்.

கருப்பை எடுத்த பெண்களுக்கு உடலுறவு மீது நாட்டம் குறைய வாய்ப்பில்லை.கருப்பை அகற்றிய பிறகு உடலுறவு கொள்வதால் பெண்களுக்கு உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது.ஆனால் கருப்பை அகற்றிய நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு பிறகு உடலுறவு கொள்வது நல்லது.

Exit mobile version