நாம் அனைவரும் தூங்கும் பொழுது நமக்கு கனவு வருவது இயல்பு தான். பெரும்பாலும் இரவு நேரத்தில் மட்டும் தான் நமக்கு கனவுகள் வருகின்றது. பகலில் தூங்கும் பொழுது வெகு சிலருக்கு மட்டும் தான் கனவு ஏற்படுகின்றது. விடிய காலையில் கண்ட கனவு பலிக்கும் என்று சொல்வதும் உண்டு.
பொதுவாக கனவுகள் ஒவ்வொருவருக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது. உறவினர் நண்பர்கள் தெரிந்தவர்கள் உயிரிழப்பது போன்ற கனவுகள், பணக்காரராக மாறுவது போன்ற. கனவுகள் வருவது உண்டு. அந்த வகையில் நம்மை நாமே கனவில் பார்த்தால் என்ன. நடக்கும் என்று பார்க்கலாம்.
நம்மை நாமே கனவில் பார்க்கும் பொழுது ஏற்படும் பலன்கள்…
* நாம் காணும் கனவுகளில் நம்மையே பார்க்கும் பொழுது நமக்கு திருமணம் நடக்கப் போகின்றது என்று அர்த்தம்.
* நம்முடைய கனவில் நமக்கு யாராவது மேக்கப் போட்டு நம்மை அழகுபடுத்துவது போல கண்டால் நாம் ஏமறப் போகின்றோம் என்று அர்த்தம். அதே போல நம்மை நாமே அலங்காரம் செய்வது போல நம்முடைய கனவில் வந்தாலும் நாம் நஷ்டம் அடையப் போகின்றோம் என்று அர்த்தம்.
* நம்முடைய கனவில் நாம் அவமானப்படுவது போன்று கனவு கண்டால் நமக்கு எதிர்பாராத விதமாக பல பிரச்சனைகள் ஏற்படும். அதுவே நாம் வேறு. யாரையாவது அவமானப்படுத்துவது போல இருந்தால் நாம் எதிர்பாராத அனைத்தும் பிரச்சனைகளும் சரியாகும்.
* நம்முடைய. கனவில் நாம் யாரிடமாவது இருந்து ஆசிர்வாதம் வாங்குவது போல நாம் கனவு கண்டால் மறைமுக எதிர்களிடம் இருந்து ஆபத்து வருகின்றது.
* நம்முடைய. கனவில் நம்முடைய உடலில் இருந்து இரத்தம் சிந்துவது போல கண்டால் நமக்கு மிகப்பெரிய நன்மை நடக்கப் போகின்றது என்று அர்த்தம். சாதாரணமாக நாம் நம்முடைய கனவில் இரத்தத்தை பார்த்தால் நாம் மிகப்பெரிய பாவச்செயலை செய்யவுள்ளோம்.
* நாம் நம்முடைய கனவில் திடீரென்று யாரென்றே தெரியாத நபரிடம் பேசும பொழுது மற்றவர்கள் மூலமாக நாம் வளர்ச்சி அடையப் போகின்றோம் என்று அர்த்தம்.
* நாம். நம்முடைய கனவில் அழகான பெண்கள் இருப்பது போல கனவு கண்டால் நம்முடைய வாழ்க்கையில் அடுத்து மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்படும்.
* நம்முடைய கனவில் பொதுவாக குழந்தைகளை கனவில் கண்டால் நம்முடைய செல்வம் பெருகும்.
* நம்முடைய கனவில் சகோதரர் இருப்பது போல கண்டால் நமக்கு இருக்கும் கடன் தொந்தரவுகள் முடியும்.
* நாம் நம்முடைய கனவில் நாம் தனியாக உட்கார்ந்து சாப்பிடுவது போல கனவு கண்டால் வாழ்க்கையில் கஷ்டம் ஏற்படும்.