Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் மட்டும் தான் செய்வீர்களா? நானும் தான் செய்வேன்! முன்னாள் ராணுவ வீரர் செய்த செயல்!

Will you do it alone? I will do the same! The act of a former soldier!

Will you do it alone? I will do the same! The act of a former soldier!

நீங்கள் மட்டும் தான் செய்வீர்களா? நானும் தான் செய்வேன்! முன்னாள் ராணுவ வீரர் செய்த செயல்!

சென்னையில்   பத்ம சேஷாத்திரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து  ஆசிரியர் ராஜகோபாலன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சென்னை தடகள பயிற்சி மைய  பயிற்சியாளர்   நாக ராஜன் ஆகியோரும் பாலியல் தொந்தரவு புகாரில் அடுத்தடுத்து சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதே போல் சுஷில் ஹரி பள்ளியிலும் புகார் வந்ததையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் சிவ சங்கர் பாபா உடல் நிலை சரி இல்லை என மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். படங்களில் சொல்வார்கள் அல்லவா அதுபோல் தான்.

பெரும்       பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவங்களைபோல்,  புதுவையிலும்  பல்கலைக்கழக  மாணவிக்கு பாலியல்    தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.வில்லியனூர் பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி. காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில்       எம்.எஸ்சி., முதலாம் ஆண்டு   படித்து வருகிறார்.

சிறு வயது முதல் போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று லட்சியம் கொண்டதால் தனது உடலை திடகாத்திரமாக வைத்திருக்க விரும்பினார். இதை அறிந்த அவரது பெற்றோர் வடமங்கலத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் சிவக்குமார் (வயது 50)என்பவர் நடத்தி வரும் உடற்பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டனர்.

அங்கு சேர்ந்த சில நாட்களிலேயே   அந்த  மாணவியிடம் சிவக்குமார் பாலியல் தொந்தரவு செய்ய ஆரம்பித்ததாக   கூறப்படுகிறது.  உடற் பயிற்சி அளிப்பதுபோல் பாலியல் தொல்லை கொடுப்பாராம். மாணவியின் உடலை வர்ணித்து ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால்   மனரீதியாக பாதிக்கப்பட்ட   மாணவி நடந்த சம்பவம்    குறித்து பெற்றோரிடம் சொல்ல தயங்கி, தான் பயிற்சிக்கு செல்ல விரும்பவில்லை என்று   கூறி வந்துள்ளார். இப்படி பெண்கள் தயங்குவதால் தான் அந்த கயவர்கள் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சம்பவத்தன்று மாணவியின் செல் போனில் தொடர்பு கொண்ட சிவக்குமார், ஆபாசமாக பேசி தனது ஆசைக்கு இணங்குமாறு அழைத்துள்ளார். இதற்கு சம்மதிக்காவிட்டால் அவதூறு பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். உடனே அதிர்ச்சி அடைந்து இதுபற்றி    மாணவி    தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே     மாணவியின் பெற்றோர் தாமதிக்காமல் வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.

உடற்பயிற்சி  கூடத்தில் இளைஞர்களுடன், 5-க்கும் மேற்பட்ட மாணவிகளும் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கும் இதுபோல் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உடற்பயிற்சிக்கு  வந்த மாணவியிடம்  முன்னாள் ராணுவ வீரர் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் வில்லியனூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version