Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த படிப்பு படித்தால் தான் லட்சக்கணக்கில் சம்பளத்துடன் வேலை கிடைக்குமா?

#image_title

இந்த படிப்பு படித்தால் தான் லட்சக்கணக்கில் சம்பளத்துடன் வேலை கிடைக்குமா? 
படித்து முடித்தவுடன் லட்சக்கணக்கில் சம்பளத்தில் வேலை தரும் 19 உயர்கல்வி படிப்புகளை நாம் இங்கு பார்க்கலாம். தற்போது எந்த படிப்பை எடுத்து படித்தாலும், லட்சக்கணக்கில் செலவு பண்ணி படித்தாலும், நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் வேலை ஏதும் கிடைப்பதில்லை்.
இளைஞர்களுக்கு தற்போது வேலை கிடைப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. அப்படி வேலை கிடைத்தாலும் சொற்ப சம்பளமே ஊதியமாக வழங்கப்படுகிறது. அந்த ஒரு வேலைக்கும் கூட பல மாதங்களாக காத்திருந்து, பல நிறுவனங்களை தேடி அலைய வேண்டி உள்ளது.
அதோடு எங்கள் கல்லூரியில் படித்தால் உடனே வேலை கை நிறைய சம்பளம் என்று விளம்பரம் செய்யும் கல்லூரிகள் பல, நம்  தமிழ்நாட்டில் உள்ளன. அந்த கல்லூரிகளை நம்பி பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்து, பிறகு படித்து முடித்து வேலை ஏதும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
 இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம், 2023ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் எந்த படிப்பு படித்தால் அதிக சம்பளம் அதாவது லட்சக்கணத்தில் சம்பளத்தை ஊதியமாக வாங்கலாம் என்பது குறித்து தற்போது பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
1. ஆர்டிபிகல் என்ஜினியர் ( Artificial Intelligence (AI) Engineer)
2. டேட்டா சைன்டிஸ்ட் ( Data Scientist )
3. மெசின் லேனிங் எக்ஸ்பெர்ட் (Machine Learning Experts )
4. பிளாக்செயின் டெவலப்பர் (Blockchain Developer)
5. புல்ஸ்டாக் சாப்ட்வேர் டெவலப்பர் ( Full Stack Software Developer)
6. புராடெக்ட் மேனேஜ்மெண்ட் (Product Management)
7. மேனேஜ்மெண்ட் கன்சல்டண்ட் (Management Consultant)
8. மார்க்கெட்டிங் மேஜனர் ( Marketing Manager)
9. பிசினஸ் அனாலிசிஸ்ட் (Business Analyst)
10. இணையதள நிபுணர்கள் (Internet of Things (IoT) Solutions Architect)
11. என்ஜினியரிங் மேனேஜர் (Engineering Manager)
12. ஐடி சிஸ்டம்ஸ் மேனேஜர் (IT Systems Manager)
13. டேட்டா என்ஜினியர் (Data Engineer)
14. சாப்ட்டேவர் ஆர்கிடெக்ட் (Software Architect)
15. க்ளொட் ஆர்க்கிடெக்ட் (Cloud Architect)
16. டெவ்ஆப்ஸ் என்ஜினியர் ( DevOps Engineer)
17. இன்வெஸ்மெண்ட் பேங்கர் (Investment Banker)
18. சார்ட்ர்டு அக்வுண்டன்ட் ( Chartered Accountant)
19. மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் (Medical Professionals (Doctors and Surgeons)
இந்த படிப்புகளுக்கு வருங்காலத்தில் நல்ல எதிர்காலம் உள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
Exit mobile version