Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

’’இருமுடி கட்டாமல் சபரிமலைக்கு போறீங்களா’’..? அதிரடி கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம் போர்ட்..!!

இரு முடிகட்டு இல்லாமல் வரும் பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும், இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை மேற்கொண்டு, 18 படிகள் வழியாக ஐய்யப்பனை தரிசிப்பார்கள். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கேரள அரசு சார்பிலும், தேவசம் போர்டின் சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்நிலையில் தான், இருமுடி கட்டு இல்லாத பக்தர்களுக்கு தற்போது முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இருமுடி கட்டாமல் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மாத பூஜை நாட்களில் தினசரி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பின்னர் பகல் 1 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். இரு முடிகட்டு இல்லாமல் வரும் பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். இந்த நடைமுறை அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version