இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வெகுவாக பாதித்து வந்தது. இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டன. அப்பொழுது கடைகள் எதுவும் செயல்படவில்லை. மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. சிறிது காலங்களுக்குப் பிறகு கொரோனா வைரஸ் தொற்று குறைய தொடங்கியதும் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
மறுபடியும் இரண்டாவது தலைவிரித்து ஆட ஆரம்பித்தது. அதன்பின் மீண்டும் முழு ஊரடங்கு போடப்பட்டன. மேலும் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு, தளர்வு ஊரடங்கு போடப்பட்டது, அதன் பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதனை அடுத்து பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மேலும் டாஸ்மாக்கை இழுத்து மூடப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் மதுபானங்களின் விலை 20 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் கடந்த வருடம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மீண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. கொரோனா காரணமாக ஊரடங்கு காலத்தில் இழந்த வருவாயை ஈட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து குறைந்த மது வகைகளுக்கு 10 ரூபாயும், நடுத்தர வகை மது வகைகளுக்கு 30 ரூபாயும், உயர்ரக மது பானங்களுக்கு 50 ரூபாய் விலை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
மேலும் மதுபான விலை உயர்வு பட்டியல் தயார் நிலையில் உள்ளதாகவும், அரசின் அனுமதிக்காக காத்து இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் மது பிரியர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இது உள்ளது.