Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரியாஸ் physic ஆக தான் அந்த காட்சியை படத்தில் வைத்தேன்..!!

winner movie

Winner Movie: தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக இருப்பவர் தான் சுந்தர் சி (Sundar C). இவரின் படங்கள் எல்லாம் தனித்துவமாக தெரியும் அளவிற்கு எடுத்திருப்பார். அதிலும் தற்போது  அரண்மனை 4 படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் பல படங்களில் நடிக்கவும் செய்தார். ஒரு நடிகராக தன்னையும் திரையில் வெளிக்காட்டிய சுந்தர் சி-யை மக்கள் நடிகராக ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் சுந்தர் சி-யை பல பேட்டிகளில் காண முடிகிறது. அவ்வாறு பேட்டிகளில் அவர் எடுத்த திரைப்படங்களை குறித்த சுவாரஸ்ய தகவல்களை கூறிவந்தார். அதில் அவர் எடுத்து வெற்றிக்கண்ட படம் தான் வின்னர். இந்த படத்தை நான் தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் எடுத்தேன் என கூறியிருப்பார்.

தெலுங்கு படத்தை பார்த்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் என்னுடைய கதையை திருடி படம் எடுத்திருந்தார்கள். அதைப் பார்த்த எனக்கு கோபம் தான் வந்தது என்றும், அவர்களை பழி வாங்க அவர்கள் படத்தை பார்த்து காட்சிகளை திருடி நான் வின்னர் படம் எடுத்ததகாவும் கூறினார்.

மேலும் இந்த படத்தில் பல நடிகர்களுடன் வில்லனாக ரியாஸ் கான் (Riyaz Khan) நடித்திருப்பார். அவர் தற்போது அவருக்கு 50 வயதை கடந்தும்  இளமையாக காணப்படுகிறார். அதற்கு அவரின் உடற்பயிற்சியும் முக்கிய காரணமாகும். சமீபத்தில் பேட்டியில் ஒன்றில் சுந்தர் சி மற்றும் ரியாஸ் பங்கேற்றனர்.

அப்போது பேசிய சுந்தர் சி நான் ரியாஸ் உடற்கட்டமைப்பை காட்டுவதற்காக தான் வின்னர் படத்தில் கட்டத்துறைக்கு கட்டம் சரியில்லை என்ற சீன் எடுத்ததாகவும் கூறினார். மேலும் இந்த சீனில் உங்களை பற்றி அனைவரும் பேசுவார்கள் ரியாஸ் என்றும், நான் அப்போது கூறினேன் என்று சுந்தர் சி கூறியுள்ளார்.

மேலும் படிக்க: Sakshi Agarwal: என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள்..!

Exit mobile version