இந்தியாவில் கடந்த ஒரு சில தினங்களாக நோய் தொற்று பாதிப்பு சரிந்து கொண்டு வந்தது இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் 12428 நபர்களுக்கும், நேற்றையதினம் 13 ஆயிரத்து 450 ஒரு பேருக்கும், நோய்த் தொற்றுப் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 157 நபர்களுக்கு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது இது நேற்றைய பாதிப்பை விடவும் 20.1% அதிகம் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 26 நேரத்தில் புதிதாக 16856 நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. கேரளாவில் மட்டும் சுமார் 9 ஆயிரத்து 445 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக ஒட்டுமொத்த நோய்தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 31 ஆயிரத்து 809 ஆக அதிகரித்திருக்கிறது.
அதேபோல நோய்த்தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் சுமார் 733 பேர் பலியாகி இருக்கிறார்கள் இதன் மூலமாக, நோய்த்தொற்று பாதிப்புக்கு பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 376 ஆக அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் உயிரிழப்பு விகிதம் 1.33 சதவீதமாக இருக்கிறது கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 17 ஆயிரத்து 95 பேர் விடுபட்டு இருக்கிறார்கள். இதனால் குணமடைந்தவர்கள் ஒட்டு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 14 ஆயிரத்து 134 என்ற அளவில் இருக்கிறது. இதன் மூலமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 98.20 சதவீதமாக இருக்கிறது.
அதோடு நாடு முழுவதும் நோய்தொற்று பாதிப்புக்கு தற்சமயம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 989 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் இதுவரையில் 104 கொடியே 4 லட்சத்து 99 ஆயிரத்து 873 நபர்களுக்கு நோய் தொற்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 லட்சத்து 1,254 பேர் நோய்தொற்று தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் இந்தியாவின் நோய்த்தொற்று பாதிப்பை கண்டறிவதற்காக நேற்று ஒரே நாளில் 12 லட்சத்து 90 ஆயிரத்து 900 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரையில் ஒட்டுமொத்தமாக 60 கோடியே 44 லட்சத்து 98 ஆயிரத்து 405 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.