மழைநீரைக் கொண்டு உங்கள் உடல்நலம் நன்றாக உள்ளதா என்பதனை அறியமுடியும்!!

0
145

மழை நீரில் நனையும் போது ஒருவருக்கு சளி தும்மல் காய்ச்சல் வந்தால் அவர்கள் நலமாக இல்லை என்று அறியலாம். எப்படி என்றால் தூய்மையான மழைநீரில் அளவுக்கு அதிகமான உயிர்த்தன்மை அதாவது பிராணன் இருக்கிறது.மழை நீரில் நனையும் போது பலருக்கும் சளி பிடிக்கிறது தும்மல் வருகிறது காய்ச்சல் வருகிறது அது ஏன் வருகிறது?

அதாவது மழை நீரில் நனையும் போது நமது உடலிலுள்ள அனைத்து செல்களும் மழை நீரில் உள்ள அந்த பிராணனை உரியத் தொடங்குகிறது உடலில் பல நாட்களாக தேங்கி வைத்திருந்த கழிவுகள் சளி மூலமாகவும் தும்பல் மூலமாகவும் காய்ச்சல் மூலமாகவும் மூக்கு ஒழுகுதல் மூலமாகவும் வெளியேற்றுகிறது.

ஒரு மனிதன் நலமாக இருக்கிறானா இல்லையா என்பதனை இதை வைத்தே கண்டுபிடித்து விடலாம். ஒருவர் மழையில் நினைந்து எதுவும் வரவில்லை என்றால் அதாவது சளி, தும்மல் ,காய்ச்சல், மூக்கு ஒழுகல் போன்ற எந்த பிரச்சனைகளும் வராமல் இருந்தால் அவர்களின் ஆரோக்கியம் மிக மிக நன்றாக உள்ளது என்று அர்த்தம்.

அதற்கு மாறாக மழையில் நினைந்து மூக்கு ஒழுகுதல், சளி, தும்மல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் அவர்கள் ஆரோக்கியம் சற்று குறைவாக உள்ளது என்பதனை அறியலாம். ஆனால் அதற்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

மழை நீரில் நனைவதால் வரும் தும்பல், மூக்கு ஒழுகுதல், சளி போன்றவற்றின் மூலம் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.எனவேதான் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மழையில் நனையும் போது அது தவறு என்று தண்டிக்காதீர்கள்.

மழை நீரில் நனைந்தால் மட்டுமே இந்த உயிர் தன்மை அதாவது பிராணன் நம் உடலுக்கு கிடைக்கும் என்றில்லை. மழைநீரை குடித்தாலும் நம் உடலுக்கு அதிக அளவில் உயிர் தன்மை கிடைக்கும் ஆனால் மழை பெய்யத் தொடங்கிய உடனே முதல் ஐந்து நிமிடத்திற்கு அந்த மழை நீரை குடிக்க கூடாது. ஏனெனில் ஆகாயத்தில் மற்றும் சுற்றுப்புறத்தில் தேங்கியுள்ள மாசுக்கள் மழை நீரில் கலந்து மாசுக்கள் கலந்த நீராக வரும்.

ஐந்து அல்லது பத்து நிமிடத்திற்கு அப்புறம் வரும் மழை நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து சூரிய ஒளி படாதவாறு வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் மூடி வைத்துவிட்டால் அந்த மழை நீரானது ஆறு ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும்.ஒருவேளை அந்த மழை நீர் சூரிய வெளிச்சத்தில் பட்டுவிட்டால் இரண்டு நாட்களுக்குள் அந்த தண்ணீரில் புழு, பூச்சிகள் உயிர் வாழத் தொடங்கிவிடும் அந்த தண்ணீர் கெட்டுவிடும்.

இவ்வுலகில் மழைநீர் மட்டுமே மிகவும் தூய்மையானது மற்றும் நடுநிலை தன்மையை கொண்ட ஒரே திரவம் ஆகும்.மழைநீரை சேகரித்து குடிக்கும் வாய்ப்பு இருந்தால் அனைவரும் முடிந்த அளவுக்கு அந்த நீரை உட்கொள்ளும் போது உடலுக்கு அதிக உயிர்த்தன்மை கிடைக்கப்பெறும் ஆரோக்கியம் பெருகும்.