Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுத்தடுத்து ஆறு கட்ட வாக்குபதிவு நிறைவடைந்த நிலையில் இன்று இறுதிகட்ட வாக்குபதிவு நடைபெறுகிறது!

அடுத்தடுத்து ஆறு கட்ட வாக்குபதிவு நிறைவடைந்த நிலையில் இன்று இறுதிகட்ட வாக்குபதிவு நடைபெறுகிறது!

ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் உத்தரகாண்ட், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மணிப்பூரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. அதில், முதல்கட்ட தேர்தல் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி நடந்தது. அதனை தொடர்ந்து, இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 5ஆம் தேதி நடைபெற்றது.

அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த மாநிலத்தில் ஏற்கனவே ஆறு கட்ட வாக்குபதிவு நடந்து முடிந்த நிலையில், இன்று (பிப்ரவரி 7) ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10-ந் தேதி நடந்தது. இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14-ந் தேதி நடந்தது. மூன்றாவது கட்ட வாக்குபதிவு பிப்ரவரி 20-ந் தேதி நடந்தது. நான்காவது கட்ட வாக்குபதிவு பிப்ரவரி 23-ந் தேதி நடந்தது. ஐந்தாவது கட்ட வாக்குபதிவு பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, மார்ச் 6-ந் தேதி ஆறாவது கட்ட வாக்குபதிவு நடந்து முடிந்தது.

இந்த நிலையில், இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழாவது மற்றும் இறுதிகட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த இறுதிகட்ட தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதையடுத்து ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற மார்ச் 10-ந் தேதி எண்ணப்படுகின்றன.

Exit mobile version