Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த பரிகாரத்தை செய்தால் மனநிம்மதியுடன் வேலை செய்யலாம்!

இந்த பரிகாரத்தை செய்தால் மனநிம்மதியுடன் வேலை செய்யலாம்!!

நிறைய பேருக்கு நிம்மதியான வேலை இருக்கும். ஆனால் அந்த நல்ல வேலையை அதிக நாள் தக்க வைத்துக் கொள்ள முடியாது. உங்களுடன் வேலை செய்யும் நபர்கள் உங்களைப் பற்றி அதிகாரிடம் தவறாக கூறியதால் உங்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படும். செய்யாத தவறுக்கு நம்மை வேலையில் இருந்து நிறுத்தி வைத்திருப்பார்கள். கெட்ட நேரம் நம் வேலையை பறிக்க பார்க்கும். வேலையில் எப்பேர்ப்பட்ட பிரச்சனை அவர்களும் இதை சரி செய்யலாம்.

வேலை தேடி தேடி ஓய்ந்து போய் உள்ளவர்கள். வேலையே கிடைக்கவில்லை என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக நீங்கள் முயற்சி செய்பவர்களாக இருந்தாலும் இந்த பரிகாரம் பலன் அளிக்கும்.

வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரக்கூடிய கடவுள் இந்த சூரிய பகவான். ஞாயிற்றுக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறந்தது.ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு நவகிரக சன்னிதானம் இருக்கும் கோவிலுக்கு சென்று நவகிரகங்களில் நடுவில் இருக்கக்கூடிய சூரிய பகவானுக்கு தீபம் ஏற்றி வைத்துவிட்டு உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

 

அதன் பின்பு வீடு திரும்பும் போது உங்களால் முடிந்த அன்னதானத்தை ஏழைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். மூன்று பேர் அல்லது ஐந்து பேருக்கு காலை உணவு வாங்கி கொடுத்தாலும் சிறந்தது. வயிறு நிறையும் வரை நல்ல சாப்பாட்டை வாங்கி கொடுங்கள். முடிந்தால் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் நீங்கள் விரதம் இருக்கலாம். உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளது என்னால் எதுவுமே சாப்பிடாமல் சூரிய பகவானுக்கு விரதம் இருக்க முடியும் என்பவர்கள் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருக்கலாம்.

 

முடியாதவர்கள் பால் பழம் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம். இதே போல ஐந்து வாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் சொன்ன விஷயங்களை பின்பற்றி வர வேண்டும். ஐந்தாவது வாரம் ஞாயிற்றுக் கிழமை மேல் சொன்னபடி நவகிரகங்களில் சூரிய பகவானை வணங்கி வழிபடுங்கள். இன்றைய சூழ்நிலையிலும் கூட இருப்பதற்கு ஒரு இடம் இல்லாமல் பிளாட்ஃபாமில் உறங்குபவர்கள் இருக்கிறார்கள் அல்லவா அப்படி கஷ்டப்படுபவர்களாக பார்த்து ஒரு ஐந்து பேருக்கு போர்வையை வாங்கிக் தானமாக கொடுத்து விடுங்கள்.

ஆனால் கட்டாயமாக வாரம் வாரம் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்கள். ஐந்து வாரங்கள் நம்பிக்கையோடு சூரிய பகவானை நினைத்து அசைவம் சாப்பிடாமல் இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் வேலையில் இருக்கக்கூடிய கஷ்டம் முற்றிலுமாக நீங்கும் என்பது நம்பிக்கை. நம்பிக்கை உடையவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

 

 

Exit mobile version